செய்திகள்

'கவர்ச்சியாக நடிக்க கட்டாயப்படுத்துனாங்க' - பிரியாமணி அதிரடி

28th Jun 2022 11:50 AM

ADVERTISEMENT

 

கவர்ச்சியாக நடிக்க நடிகைகளை கட்டாயப்படுத்துவதாக நடிகை பிரியாமணி பேசியிருப்பது சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. 

பருத்திவீரன் படத்தில் முத்தழகாக ரசிகர்களைக் கவர்ந்தவர் பிரியாமணி. இந்தப் படத்துக்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. பின்னர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் கமர்ஷியல் படங்களில் நடித்துவந்தார். 

நீண்ட இடைவேளைக்கு பிறகு தி ஃபேமிலி மேன் என்ற இணையத்தொடர் அவரை இந்திய அளவில் பிரபலமாக்கியது. அசுரன் படத்தின் தெலுங்கு ரீமேக்கான நாரப்பாவில் நடித்திருந்த அவர், தற்போது அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துவரும் ஜவான் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துவருகிறார். 

ADVERTISEMENT

இதையும் படிக்க | இசையமைப்பாளராகும் இயக்குநர் மிஷ்கின் - யார் படத்துக்கு தெரியுமா ?

இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தென்னந்திய மொழிகளில் நடிகைகளை கவர்ச்சிகரமாக நடிக்க கட்டாயப்படுத்தப்படுவதாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது, ஹிந்தி நடிகைகளுக்கு உள்ள உடல்வாகு வேறு. தமிழ் நடிகைகளுக்கு உள்ள உடல்வாகு வேறு.

ஆனால் வேண்டுமேன்றே கவர்ச்சி காட்சிகளில் நடிக்க கட்டாயப்படுத்துகின்றனர் என்று கூறிய அவர், தற்போது நிலைமை கொஞ்சம் மாறியிருப்பதாக தெரிவித்தார். 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT