செய்திகள்

பிரபல நடிகர் தூக்கிட்டு தற்கொலை - ரசிகர்கள் அதிர்ச்சி

28th Jun 2022 12:28 PM

ADVERTISEMENT

 

பிரபல மலையாள நடிகர் என்.டி.பிரசாத் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

நிவின் பாலியின் ஆக்சன் ஹீரோ பிஜூ படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் என்.டி.பிரசாத். மலையாள படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துவந்தார்.

 இவர் கொச்சி அருகே உள்ள களமச்சேரியில் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்துவந்துள்ளார். இந்த நிலையில் அவர் தனது வீட்டுக்கு அருகே இருந்த மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவருக்கு வயது 43. 

ADVERTISEMENT

இதையும் படிக்க | 'கவர்ச்சியாக நடிக்க கட்டாயப்படுத்துனாங்க' - பிரியாமணி அதிரடி

குடும்ப பிரச்னை காரணமாக ஏற்பட்ட மன அழுத்தத்தினால் இவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். 

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நடிகர் பிரசாத்  போதைப் பொருளுடன் காவல்துறையினரிடம் பிடிபட்டதாக கூறப்படுகிறது. இவர் மீது காவல்நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரிகிறது. 

Tags : NT Prasad
ADVERTISEMENT
ADVERTISEMENT