செய்திகள்

''திரௌபதி குடியரசுத் தலைவர்னா, அப்போ பாண்டவர்கள்?'' - இயக்குநர் ராம்கோபால் வர்மா மீது வழக்குப்பதிவு

28th Jun 2022 12:44 PM

ADVERTISEMENT

 

திரௌபதி குடியரசுத் தலைவர் என்றால் பாண்டவர்கள் யார் என கேள்வி எழுப்பிய இயக்குநர் ராம்கோபால் வர்மா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக திரௌபதி முர்மு நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் இதுகுறித்து இயக்குநர் ராம் கோபால் வர்மா தனது ட்விட்டர் பக்கத்தில், திரௌபதி குடியரசுத் தலைவர் என்றால் பாண்டவர்கள் யார்? முக்கியமாக கௌரவர்கள் யார் ? என்று கேள்வி எழுப்பினார். 

இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் ட்விட்டர் பதிவு சர்ச்சையாக உருவெடுத்தது. அவருக்கு எதிராக பல்வேறு அமைப்பினரும் கருத்து தெரிவித்தனர். இதனையடுத்து விளக்கமளித்த ராம் கோபால் வர்மா, இது நகைச்சுவைக்காக சொல்லப்பட்டதே தவிர, உள்நோக்கம் ஏதுமில்லை. மகாபாரதத்தில் திரௌபதி தான் எனக்கு விருப்பமான கதாப்பாத்திரம்.

ADVERTISEMENT

இதையும் படிக்க | பிரபல நடிகர் தூக்கிட்டு தற்கொலை - ரசிகர்கள் அதிர்ச்சி

திரௌபதி என்ற பெயர் அரிதானது. அதனால் அதனை நினைவுபடுத்தும் விதமாக அப்படிக்கூறினேன். யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கில்லை என்று கூறியுள்ளார். 

இதனையடுத்து மனோஜ் சின்ஹா என்பவர் ராம் கோபால் வர்மாவுக்கு எதிராக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் மீது தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 


 

ADVERTISEMENT
ADVERTISEMENT