செய்திகள்

மலையாள நடிகை அம்பிகா ராவ் மரணம் - ரசிகர்கள் இரங்கல்

28th Jun 2022 03:11 PM

ADVERTISEMENT

 

மலையாள நடிகை அம்பிகா ராவின் மறைவுக்கு பிரபலங்கள் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். 

மலையாள நடிகையான அம்பிகா ராவ் மீச மாதவன், சால் அண்ட் பெப்பர், அனுராக கரிக்கின் வெள்ளம், தமாசா போன்ற படங்களின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்துவந்தார். 

கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான கும்பலாங்கி நைட்ஸ் படத்தில் இவரது நடிப்பு விமர்சகர்களால் பாராட்டப்பட்டது. இவருக்கு ராகுல் மற்றும் சோஹன் என இரண்டு மகன்கள் உள்ளனர். 

ADVERTISEMENT

இதையும் படிக்க | எது உண்மை? மாதவனைப் பார்த்து மிரண்டுபோன சூர்யா - ராக்கெட்ரி படப்பிடிப்புத் தள விடியோ வைரல்

இந்த நிலையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்த அம்பிகா ராவ் மாரடைப்பால் காலமானார். அவரது மறைவுக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். அந்த வகையில் நடிகர் பிருத்விராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் அம்பிகா ராவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். 


 

Tags : Ambika Rao
ADVERTISEMENT
ADVERTISEMENT