செய்திகள்

எது உண்மை? மாதவனைப் பார்த்து மிரண்டுபோன சூர்யா - ராக்கெட்ரி படப்பிடிப்புத் தள விடியோ வைரல்

28th Jun 2022 02:41 PM

ADVERTISEMENT

 

ராக்கெட்ரி படப்பிடிப்புத் தளத்தில் சூர்யா கலந்துகொண்ட விடியோவை மாதவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விடியோவை வெளியிட்டுள்ளார். 

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு 'ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்' என்ற படத்தை நடிகர் மாதவன் நடித்து இயக்கியுள்ளார். இந்தப் படம் வருகிற வெள்ளிக்கிழமை (ஜூலை 1) திரைக்குவரவிருக்கிறது. 

இந்தப் படத்தில் மாதவனுக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்க, சூர்யா சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். நடிகர் சூர்யா இந்தப் படத்தில் நம்பி நாராயணனை தொலைக்காட்சியில் நேர்காணல் செய்யும் தொகுப்பாளராக நடித்துள்ளார். 

ADVERTISEMENT

இதையும் படிக்க | ''தமிழின் தலைசிறந்த நடிகர்களில் ஒருவர்...'' - பூ ராமுவின் மறைவுக்கு மம்மூட்டி இரங்கல்

இந்த நிலையில் படப்பிடிப்புத் தளத்தில் உண்மையான நம்பி நாராயணனையும், அவரைப் போல வேடமிட்ட நடிகர் மாதவனையும் நடிகர் சூர்யா மிரட்சியாக பார்க்கும் விடியோவை மாதவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

அந்த விடியோவில் யார் உண்மை என சூர்யா ஆச்சரியப்படுகிறார். இந்த விடியோவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துவருகிறது.

சூர்யா சிறப்புத் தோற்றத்தில் நடித்த விக்ரம் திரைப்படம் பெரும் வெற்றிபெற்றது. ரோலெக்ஸ் என்ற அவரது வேடம் படத்துக்கு சிறப்பம்சமாக அமைந்துள்ளது. இதனையடுத்து ராக்கெட்ரி படத்தில் சூர்யாவின் வேடமும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by R. Madhavan (@actormaddy)

ADVERTISEMENT
ADVERTISEMENT