செய்திகள்

விருதுநகர் சிறையில் 'குக் வித் கோமாளி' புகழ் - என்ன ஆச்சு ? வைரலாகும் விடியோ

28th Jun 2022 02:16 PM

ADVERTISEMENT

 

குக் வித் கோமாளி புகழ் விருதுநகர் மாவட்ட சிறையிலிருந்து வெளியே வரும் விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

கலக்கப்போவது யாரு உள்ளிட்ட விஜய் டிவி நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர் புகழ். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலக்கினார். இதன் காரணமாக அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் குவிந்தது. 

இதையும் படிக்க | ''தமிழின் தலைசிறந்த நடிகர்களில் ஒருவர்...'' - பூ ராமுவின் மறைவுக்கு மம்மூட்டி இரங்கல்

ADVERTISEMENT

அஸ்வினுடன் என்ன சொல்லப் போகிறாய், சந்தானத்துடன் இணைந்து சபாபதி, சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்தார். தற்போது ஜூ கீப்பர் என்ற படத்தில் நாயகனாக நடித்துவருகிறார்.

படங்களில் நடித்துவருவதால் அவ்வப்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்துகொள்கிறார். இந்த நிலையில் விருதுநகர் மாவட்ட சிறையிலிருந்து புகழ் வெளியேவருவது போன்ற விடியோ சமூக வலைதளங்களல் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் புதிய படத்தின் படப்பிடிப்புக்காக அமைக்கப்பட்ட செட் என கூறப்படுகிறது. ஆனால் என்னப் படத்துக்காக, எப்பொழுது எடுக்கப்பட்ட விடியோ போன்ற விவரங்கள் தெரியவில்லை. 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vijay Tv Pugazh FC (@cooku_with_pugazh)

ADVERTISEMENT
ADVERTISEMENT