செய்திகள்

'கேட்கவும், பார்க்கவும் நல்லா இருக்கு' - தன்னைப் பற்றிய வதந்திக்கு பிக்பாஸ் ராஜு விளக்கம்

28th Jun 2022 03:52 PM

ADVERTISEMENT

 

தன்னைப் பற்றி பரவும் வதந்திக்கு பிக்பாஸ் ராஜு விளக்கமளித்துள்ளார்.

கார்த்தியின் சர்தார் படத்தில் பிக்பாஸ் ராஜு முக்கிய வேடத்தில் நடித்திருப்பதாக தகவல் பரவியது. மேலும் அந்தப் படத்தின் விக்கிபீடியா பக்கத்தில் அவரது பெயர் இடம்பெற்றிருந்தது. 

இதனையடுத்து ராஜுவின் ரசிகர்கள் இந்தத் தகவலை சமூக வலைதளங்களில் பகிர்ந்து டிரெண்ட் செய்தனர். இந்த நிலையில் ராஜு தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து விளக்களித்துள்ளார். 

ADVERTISEMENT

இதையும் படிக்க | மலையாள நடிகை அம்பிகா ராவ் மரணம் - ரசிகர்கள் இரங்கல்

அவரது பதிவில், எனக்கு சர்தார் படத்தில் நடிக்க விருப்பம். ஆனால் இது உண்மையில்லை. நான் சர்தார் படத்தில் நடிக்கவில்லை. ஆனால் இது கேட்கவும் பார்க்கவும் நல்லா இருக்கு என பதிலளித்துள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT