செய்திகள்

ஹரிஷ் கல்யாணுக்கு விரைவில் திருமணம்

28th Jun 2022 11:31 AM

ADVERTISEMENT

 

ஹரிஷ் கல்யாணுக்கு விரைவில் திருமணம் நடைபெறவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கவனம் ஈர்த்தவர் ஹரிஷ் கல்யாண். இந்த நிகழ்ச்சியின் மூலம் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைத்தார்கள். இதனையடுத்து யுவன் தயாரிப்பில் அவர் நடித்த பியார் பிரேமா காதல் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. 

அடுத்தடுத்து இவர் நடித்த இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், தாராள பிரபு ஆகிய படங்கள் ரசிகர்களைக் கவர்ந்தன. தற்போது சசி இயக்கத்தில் நூறுகோடி வானவில் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்திலிருந்து சமீபத்தில் ஒரு பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 

ADVERTISEMENT

இதையும் படிக்க | இசையமைப்பாளராகும் இயக்குநர் மிஷ்கின் - யார் படத்துக்கு தெரியுமா ?

தற்போது டீசல் என்ற படத்தில் நடித்துவருகிறார். இவருக்கு விரைவில் திருமணம் நடைபெறவிருப்பதாக தகவல் பரவிவருகிறது. பெற்றோர்களால் முடிவு செய்யப்பட்ட ஹரிஷ் கல்யாணின் திருமணம் வருகிற ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் நடைபெறலாம் என்று கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


 

Tags : harish Kalyan
ADVERTISEMENT
ADVERTISEMENT