செய்திகள்

நடிகர் விஜய்யின் வாரிசு படத்தில் ஆள்தோட்ட பூபதி பாடல் ?

27th Jun 2022 06:11 PM

ADVERTISEMENT

 

நடிகர் விஜய்யின் வாரிசு படத்தில் யூத் பட ஆள்தோட்ட பூபதி பாடல் ரீமிக்ஸ் செய்யப்பட்டு பயன்படுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நடிகர் விஜய் தற்போது தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்துவருகிறார்.  நடிகர் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியான இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்த நிலையில், 2வது மற்றும் 3வது போஸ்டர் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது. 

இந்தப் படத்தில் தமன் இசையில் ஒரு பாடலை நடிகர் விஜய் பாடியுள்ளாராம். மேலும் இந்தப் படத்துக்கு இயக்குநர் ராஜு முருகன் வசனம் எழுதவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், பாடலாசிரியர் விவேக் அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளார். 

ADVERTISEMENT

இதையும் படிக்க |  ''நான் விலகுகிறேன். எனக்கு வேறு வழியில்லை'' - அதிரடியாக அறிவித்த ரோஜா தொடர் நாயன்

குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்க, சரத்குமார், ஷாம், குஷ்பு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துவருகின்றனர். இந்தப் படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த நிலையில் இந்தப் படத்தில் யூத் பட ஆள்தோட்ட பூபதி பாடல் ரீமிக்ஸ் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக மாஸ்டர் படத்தில் கில்லி பட கபடி கபடி பாடல் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT