செய்திகள்

''நான் விலகுகிறேன். எனக்கு வேறு வழியில்லை'' - அதிரடியாக அறிவித்த ரோஜா தொடர் நாயன்

27th Jun 2022 05:09 PM

ADVERTISEMENT

 

ரோஜா தொடரிலிருந்து விலகுவதாக அதன் நாயகன் சிபு சூர்யன் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். 

ரோஜா தொடரில் அர்ஜூன் என்ற வேடத்தின் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் சிபு சூர்யன். அர்ஜுன் சார் என நாயகி அவரை அழைப்பது ரசிகர்களிடையே மிகவும் பிரபலம்.

கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கு மேலாக வெற்றிகரமாக  ஒளிபரப்பாகும் இந்தத்தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இந்த நிலையில் இந்தத் தொடரின் நாயகன் சிபு திடீரென விலகுவதாக அறிவித்துள்ளார். 

ADVERTISEMENT

இதையும் படிக்க | அதிக மக்கள் திரையரங்குகளில் பார்த்த படம் - சூர்யவம்சம் குறித்து சரத்குமார் நெகிழ்ச்சி

இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ''எல்லோருக்கும் வணக்கம், நான் ரோஜா தொடரிலிருந்து விலகுகிறேன். ஆகஸ்ட் மாதம் எனது படப்பிடிப்பு பணிகள் அனைத்தையும் நிறைவு செய்கிறேன். ஆழ்ந்த யோசனைக்கு பிறகே இந்த முடிவை நான் எடுத்துள்ளேன்.  

நான் புதிய பயணத்தை மேற்கொள்ள முடிவு செய்துள்ளேன். விடைபெறுவது அவ்வளவு எளிதல்ல. ஆனால் சில நேரங்களில் அது தவிர்க்க முடியாதது. அர்ஜூன் என்ற கதாப்பாத்திரம் என் இதயத்துக்கு நெருக்கமானது. 

உங்களது எல்லையற்ற அன்புக்கும் தொடர்ச்சியாக நீங்கள் அளித்த ஆதரவுக்கும் நன்றி. நீங்கள் இல்லாமல் நான் இல்லை. நான் தொடர்ந்து உங்களை மகிழ்விப்பேன். எப்பொழுதும் உங்கள் அன்பும் ஆதரவும் தேவை'' என தெரிவித்துள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT