செய்திகள்

நடிகர் 'பூ' ராமு காலமானார்

27th Jun 2022 07:34 PM

ADVERTISEMENT


நடிகரும் நாடகக் கலைஞருமான பூ ராமு உடல்நலக் குறைவு காரணமாக இன்று (திங்கள்கிழமை) காலமானார்.

இயக்குநர் சசி இயக்கிய பூ படத்தில் அறிமுகமாகி கவனம் பெற்றவர் ராமு. நீர்ப்பறவைகள், தங்க மீன்கள், வீரம், ஜில்லா, நெடுநல்வாடை, பரியேறும் பெருமாள், கர்ணன், சூரரைப் போற்று எனப் பல படங்களில் நடித்துள்ளார். 

மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பூ ராமு இன்று அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், அவர் சிகிச்சைப் பலனின்றி மாலை 7 மணியளவில் காலமானார்.

Tags : Poo Ramu
ADVERTISEMENT
ADVERTISEMENT