செய்திகள்

சீனு ராமசாமி என் மகன்: மாமனிதன் படம் பார்த்து நெகிழ்ந்த பாரதிராஜா!

26th Jun 2022 03:29 PM

ADVERTISEMENT


'மாமனிதன்' திரைப்படத்தை இயக்கிய சீனு ராமசாமி, எனது மகன் என பாரதிராஜா நெகிழ்ச்சி படத் தெரிவித்துள்ளார். 

சமீபத்தில் 'மாமனிதன்' திரைப்படத்திற்கு ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்திருந்த நிலையில், தற்போது பாரதிராஜாவும் வாழ்த்து கூறியிருப்பதால், படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர்.

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள 'மாமனிதன்' திரைப்படம் ஜூன் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. 

ADVERTISEMENT

படிக்க விஜய் சேதுபதியின் மாமனிதன் படத்தைப் பாராட்டிய ரஜினிகாந்த்

யுவன் ஷங்கர் ராஜா தயாரித்துள்ள இந்தப் படத்தை  ஸ்டுடியோ 9 நிறுவனத்தின் சார்பில் நடிகர் ஆர்.கே.சுரேஷ் வெளியிட்டுள்ளார். இந்தப் படத்துக்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்ய, இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இசையமைத்துள்ளனர். 

இந்நிலையில் இந்த திரைப்படத்தைப் பார்த்த இயக்குநர் பாரதிராஜா, சீனு ராமசாமிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரை நேரில் அழைத்து பாராட்டி மரியாதை செய்தார். மேலும் பாரதிராஜா எனது மகன் எனவும் குறிப்பிட்டார். 

பாரதிராஜா கிராமத்து கதாபாத்திரங்களுக்கும், குடும்ப கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து திரைப்படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

படிக்க | வெற்றிப் படங்களுடன் இணைந்ததா மாமனிதன்? திரை விமர்சனம்

ADVERTISEMENT
ADVERTISEMENT