விக்ரம் 2 படம் குறித்து வெங்கட் பிரபு பேசும் விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த விக்ரம் 2 திரைப்படம் கடந்த ஜூன் 3 ஆம் தேதி வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது. வெளியாகி 20 நாட்களுக்கு மேலாகியும் நிறைய திரையரங்குகளில் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.
4 ஆண்டுகளுக்கு பிறகு வெளியான கமல் படம் என்பதால் ரசிகர்கள் இந்தப் படத்தைக் கொண்டாடி வருகின்றனர். தமிழகத்தில் பாகுபலி 2 படத்தின் வசூல் சாதனையை விக்ரம் திரைப்படம் முறியடித்துவிட்டதாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகின்றன. இப்படியொரு வெற்றிப் படத்தை அளித்ததற்காக இயக்குநர் லோகேஷிற்கு பாராட்டுக்கள் குவிந்துவருகின்றன.
இதையும் படிக்க | குக் வித் கோமாளி அம்மு அபிராமி, புகழ் நடிக்கும் புதிய படம் ‘குதுகலம்’
இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் விஜய் டிவியின் காபி வித் டிடி நிகழ்ச்சியில் இயக்குநர் வெங்கட் பிரபு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது கமல்ஹாசனுடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு கிடைத்தால் விக்ரம் படத்தின் 2 ஆம் பாகத்தை உருவாக்குவேன் என்று தெரிவித்திருந்தார். இந்த விடியோவை தற்போது வைரலாகிவருகிறது.
மேலும் ஒருவேளை விக்ரம் படத்தை வெங்கட் பிரபு இயக்கியிருந்தால் எப்படி இருக்கும் என ரசிகர்கள் தங்களது கறப்னைகளை பகிர்ந்து வருகிறார்கள்.