செய்திகள்

ஷாருக்கானின் ‘பதான்’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியானது

25th Jun 2022 05:14 PM

ADVERTISEMENT

 

நடிகர் ஷாருக்கான் நடிக்கும் ‘பதான்’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது. 

பிரபல இந்தி நடிகர் ஷாருக்கான் நடிக்கும் பதான் படத்தினை இயக்குநர் ஆதித்யா சோப்ரா இயக்குகிறார். இப்படம் யாஷ் ராஜ் தயாரிப்பின் 50வது படமென்பது குறிப்பிடத்தக்கது. 

இப்படத்தில் தீபிகா படுகோன், ஜான் ஆப்ரகாம், டிம்பள் கபாடியா ஆகியோர் நடிக்கின்றனர். இப்படம் அடுத்தாண்டு ஜனவரி 25இல் வெளியாகும் என அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகியுள்ளது. 

ADVERTISEMENT

மேலும் இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகுமென்பது குறிப்பிடத்தக்கது. அட்லி இவரை வைத்து எடுக்கும் ஜவான் படமும் இந்தி மற்றும் தமிழில் வெளியாவதால் இப்படத்திற்கும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT