செய்திகள்

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விக்ரம் பட போர்கண்ட சிங்கம் விடியோ பாடல் வெளியானது !

25th Jun 2022 12:53 PM

ADVERTISEMENT

 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் படத்திலிருந்து போர்கண்ட சிங்கம் விடியோ பாடல் வெளியானது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான விக்ரம் திரைப்படம் கடந்த ஜூன் 3 ஆம் தேதி வெளியாகி விமர்சகர்களின் ஆதரவைப் பெற்றது. இந்தப் படம் ரூ.350 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. 

தமிழக அளவில் பாகுபலி 2 படத்தின் வசூலை இந்த படம் முறியடித்தது. இந்த நிலையில் இந்தப் படத்திலிருந்து அனிருத் இசையில் போர்கண்ட சிங்கம் விடியோ பாடல் வெளியாகியுள்ளது.  விஷ்ணு எழுதியுள்ள இந்தப் பாடலை அனிருத் பாடியுள்ளார். 

ADVERTISEMENT

இதையும் படிக்க |  கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் நாயகனாகும் ராகவா லாரன்ஸின் தம்பி எல்வின் - படப்பிடிப்பு துவக்கம்

இந்தப் படம் வெளியாகி 20 நாட்களுக்கு மேலாகியும் பெரும்பாலான திரையரங்குகளில் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. திரையரங்க உரிமையாளர்கள், விநியோகிஸ்தர்கள் உள்ளிட்டோருக்கு நல்ல லாபத்தை விக்ரம் திரைப்படம் பெற்றுத்தந்துள்ளது. 

விக்ரம் படத்தை உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பில் தமிழகத்தில் வெளியிட்டார். இந்தப் படத்தில் தனது பங்காக மட்டும் ரூ.75 கோடிக்கும் அதிகமாக கிடைத்ததாக வெற்றி விழாவில் உதயநிதி தெரிவித்திருந்தார். 


 

ADVERTISEMENT
ADVERTISEMENT