செய்திகள்

தெலுங்கில் வாழ்த்துக் கூறிய இளையராஜா- காரணம் என்ன?

25th Jun 2022 02:44 PM

ADVERTISEMENT

 

வெங்கட் பிரபு இயக்கும் முதல் தெலுங்கு படம் வெற்றியடைய இசையமைப்பாளர் இளையராஜா தெலுங்கில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். 

வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா, கிரித்தி ஷெட்டி நடிக்கும் படத்தில் இளையராஜா- யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இசையமைக்க உள்ளனர். வெங்கட் பிரபுக்கு 11வது படமானாலும் இது அவருக்கு முதல் தெலுங்குப் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இது நாக சைதன்யாவின் 22வது படமென்பதும் குறிப்பிடத்தக்கது. ஸ்ரீகர் பிரசாத் இப்படத்திற்கு எடிட்டிங். தெலுங்கு மற்றும் தமிழில் படம் வெளியாகும் என சொல்லப்படுகிறது.  

ADVERTISEMENT

இளையராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் தெலுங்கில் வாழ்த்துக்கூறி விடியோ ஒன்றினைப் பகிர்ந்துள்ளார். அதில் கூறியதாவது: 

என்னுடைய மற்றும் உன்னுடைய அப்பாவின் செல்வாக்கும் இல்லாமல் உன்னுடைய சொந்த உழைப்பின் மூலமாக கிடைத்த வெற்றியின் மூலம் முதன் முதலில் தெலுங்கு படம் எடுப்பது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. படத்தின் பூஜைக்கு வரமுடியாததற்கு எனக்கு மிகவும் வருத்தம். இருந்தாலும் என்னுடைய ஆசி எப்போதும் இருக்கும். உன்னுடைய வெற்றிப் படத்தில் இசையமைப்பது மிகுந்த மகிழ்ச்சி. படத்தின் கம்போசிங் முடிவடைந்து விட்டது. படம் வெற்றியடைய வாழ்த்துகள். கடவுள் உனக்கு ஆசி புரியட்டும்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT