செய்திகள்

குக் வித் கோமாளி அம்மு அபிராமி, புகழ் நடிக்கும் புதிய படம் ‘குதுகலம்’

25th Jun 2022 03:33 PM

ADVERTISEMENT

 

அசுரன் படத்தின் மூலம் கவனம் பெற்ற நடிகை அம்மு அபிராமி நடிக்கும் புதிய திரைப்படம் ‘குதுகலம்’ படத்தினை உலகநாதன் சந்திரசேகரன் இயக்குகிரார். 

அசுரன் படம் மற்று, குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் கவனம் பெற்ற அம்மு அபிராமி, பால சரவணன், புகழ், கவிதா பாரதி, நக்கலைட்ஸ் புகழ் அனீஷ், மன்மோகித் ஆகியோர் நடிப்பில் உண்மையை சம்பவத்தை அடிபடையாக வைத்து உருவாகிவரும் படம்தான் ‘குதுகலம்’.

இப்படத்தினை இயக்குகிறார் உலகநாதன் சந்திரசேகரன். இவர் துரை செந்தில் குமாரின் படங்களான ‘காக்கி சட்டை’, ‘எதிர் நீச்சல்’ போன்ற படங்களில் உதவி இயக்குநராக பணிப்புரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT

ரேட் & கேட் பிக்ஸர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படம் தந்தையின் வாக்குறுதியை நிறைவேற்றும் இளைஞரின் உண்மை கதையை தழுவி எடுக்கப்படும் படமென சொல்லப்படுகிறது. பெரும்பலான காட்சிகள் திருப்பூரிலே படமாக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. 

இதையும் படிக்க: தெலுங்கில் வாழ்த்துக் கூறிய இளையராஜா- காரணம் என்ன?

இப்படத்திற்கான பூஜை சமீபத்தில் நடைப்பெற்றது. இதில் அம்மு அபிராமி, புகழ் ஆகியோர் கலந்துக்கொண்டனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT