செய்திகள்

இரண்டாவது குழந்தைக்கு தந்தையானர் நடிகர் நகுல்

19th Jun 2022 04:57 PM

ADVERTISEMENT

 

நடிகர் நகுல்-ஸ்ருதி இணையினருக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது. 

பிரபல நடிகை தேவயானியின் சகோதரரான நகுல், 2003-ல் பாய்ஸ் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். 2008-ல் வெளியான காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் கதாநாயகன் ஆகி இதுவரை பல படங்களில் நடித்துள்ளார். சில பாடல்களையும் பாடியுள்ளார். சூப்பர் சிங்கர் ஜூனியர் 7 நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டுள்ளார். 

இந்த ஜோடிக்கு ஏற்கனவே அதிரா எனும் பெண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தை ‘வாட்டர் பர்த்’ எனப்படும் தண்ணீரில் குழந்தையைப் பெற்றெடுக்கும் முறையில்தான் பெற்றெடுத்தனர். தற்போது இரண்டாவது குழந்தையும் அதே முறையில் பெற்றெடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT

தனக்கு புதியதாக பிறந்த ஆண் குழந்தையுடன் தானும் கணவரும் இருக்கும் புகைப்படத்துடன் இந்த தகவலை ஸ்ருதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும், நகுலின் பிறந்த நாள் ஜூன் 15, தற்போது அவரது மகன் பிறந்தது ஜூன் 18 என்பது சுவாரசியமானது.  

ADVERTISEMENT
ADVERTISEMENT