செய்திகள்

தன்னுடன் நடித்த நடிகரை காதல் திருமணம் செய்த பாலா பட நாயகி

17th Jun 2022 05:04 PM

ADVERTISEMENT

 

நடிகை மது ஷாலினியின் திருமண புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

பதினாறு, அவன் இவன், தூங்காவனம் உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்திருந்தவர் மது ஷாலினி. தெலுங்கில் முன்னனி நாயகியாக இருந்த இவர் ஹிந்தியிலும் சில படங்களில் நடித்துள்ளார். 

மது ஷாலினி கடைசியாக ஆர்.கே.சுரேஷின் விசித்திரன்  படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் கடந்த மே 6 ஆம் தேதி வெளியாகியிருந்தது. இந்த நிலையில் இவருக்கும் நடிகர் கோகுல் ஆனந்த் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. 

ADVERTISEMENT

இதையும் படிக்க | இளையராஜாவுடன் ஒரே மேடையில் தோன்றும் வடிவேலு

நடிகர் கோகுல் ஆனந்த் தமிழில் மாலை நேரத்து மயக்கம், சென்னை 2 சிங்கப்பூர், பஞ்சராக்ஷரம், திட்டம் இரண்டு, நடுவன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். பஞ்சராக்ஷரம் படத்தில் கோகுல் ஆனந்த்தும், மது ஷாலினியும் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது திருமண புகைப்படத்தை பகிர்ந்த மது ஷாலினி, 'நீங்கள் காட்டிய அன்புக்கு நன்றி. எங்கள் வாழ்வின் புதிய அத்தியாத்தை நம்பிக்கையுடனும், நன்றியுணர்வுடனும் துவங்குகிறோம்' என்று குறிப்பிட்டுள்ளார். 

அவருக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். 'பஞ்சராக்ஷரம்' படத்தில் இருவருடனும் இணைந்து நடித்த சந்தோஷ் பிரதாப், இருவருக்கும் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT