செய்திகள்

வெளியானது சிவகார்த்திகேயனின் டான் பட விடியோ பாடல்

15th Jun 2022 06:01 PM

ADVERTISEMENT

 

சிவகார்த்திகேயன் தயாரித்து நடித்துள்ள டான் படத்திலிருந்து பே என்ற விடியோ பாடல் வெளியாகியுள்ளது 

சிவகார்த்திகேயன் தனது எஸ்கே புரொடக்சன்ஸ் சார்பில் தயாரித்து நடித்திருந்த டான் திரைப்படம் கடந்த மே 13 ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இருப்பினும் இந்தப் படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. 

மேலும் இந்தப் படத்தின் வெற்றி விழா சமீபத்தில் நடைபெற்றது. விழாவில் டான் படத்தை தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பாக வெளியிட்ட உதயநிதி ஸ்டாலின், முதலில் இந்தக் கதை தனக்கு கூறப்பட்டதாகவும், தன்னால் பள்ளி மாணவனாக நடிக்க முடியாது என்பதால் மறுத்து விட்டதாகவும் தெரிவித்திருந்தார். 

ADVERTISEMENT

இதையும் படிக்க | கவின் நடித்துள்ள டாடா பட முதல் பாடலின் முன்னோட்ட விடியோ

டாக்டர் படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்திலும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்திருந்தார். இந்தப் படத்தில் இடம் பெற்ற பே விடியோ பாடல் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது. இந்த நிலையில் தற்போது விடியோ பாடல் வெளியாகியுள்ளது. 


 

ADVERTISEMENT
ADVERTISEMENT