செய்திகள்

சமீபத்திய ஹிட் பாடலுக்கு செம குத்தாட்டம் போடும் ஷிவானி - வைரலாகும் விடியோ

15th Jun 2022 12:40 PM

ADVERTISEMENT

 

ஹிந்தியில் வெற்றிபெற்ற பதாய் ஹோ படத்தின் தமிழ் பதிப்பானது வீட்ல விஷேசம் என்ற பெயரில் உருவாகியுள்ளது. ஆர்ஜே பாலாஜி நாயகனாக நடித்தது மட்டுமல்லாமல் என்ஜே சரவணனுடன் இணைந்து இந்தப் படத்தை இயக்கவும் செய்துள்ளார்.

இந்தப் படத்தில் ஆர்ஜே பாலாஜிக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடிக்க, சத்யராஜ், ஊர்வசி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்தது. இந்தப் படம் வருகிற ஜூன் 17 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. 

இதையும் படிக்க | வெளியானது பிரம்மாஸ்திரம் பட டிரெய்லர்

ADVERTISEMENT

இந்தப் படத்துக்கு கிரிஸ் கோபாலகிருஷ்ணன் இசைமைக்க, கார்த்திக் முத்துகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆர்ஜே பாலாஜி இந்தப் படத்துக்கு வசனம் எழுதியுள்ளார். இந்த நிலையில் நடிகை ஷிவானி இந்தப் படத்தில் இடம்பெற்ற கல்யாண பாட்டு என்ற பாடலுக்கு நடனமாடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விடியோ பகிர்ந்துள்ளார். 

நடிகை ஷிவானி சமீபத்தில் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியின் 3 மனைவிகளில் ஒருவராக நடித்திருந்தார். படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தாலும் மிகச் சிறிய வேடத்தில் ஷிவானி நடித்திருந்தது அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்ததாக கூறப்படுகிறது. தற்போது பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஒரு படத்திலும், வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்திலும் ஷிவானி நடித்து வருகிறார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT