செய்திகள்

'லோகேஷுக்கு கார், சூர்யாவுக்கு ரோலெக்ஸ்..., அனிருத்துக்கு கமல் என்ன கொடுத்தார்?'

15th Jun 2022 03:17 PM

ADVERTISEMENT

 

கமல் உங்களுக்கு என்ன பரிசு கொடுத்தார் என்ற ரசிகரின் கேள்விக்கு, 'எனக்கு விக்ரம் கொடுத்தார்' என அனிருத் பதிலளித்தார்.  

விக்ரம் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. விக்ரம் படத்தின் காரணமாக இந்த மாதம் வெளியாகவிருந்த ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்த யானை, பார்த்திபனின் இரவின் நிழல் ஆகிய படங்கள் அடுத்த மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளன. 

இதையும் படிக்க | நடிகை தீபிகா படுகோன் நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதி ? என்ன நடந்தது ?

ADVERTISEMENT

படத்தில் அனிருத்தின் பின்னணி இசை காட்சிகளுக்கு வலு சேர்ப்பதாக அமைந்திருந்தது. இந்த நிலையில் கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள திரையரங்குக்கு இயக்குநர் லோகேஷ் மற்றும் அனிருத் சென்று ரசிகர்களை சந்தித்தனர். 

அப்போது ரசிகர் ஒருவர் கமல்ஹாசன் இயக்குநர் லோகேஷுக்கு காரும், சூர்யாவுக்கு ரோலெக்ஸ் வாட்ச்சும் பரிசளித்தார். உங்களுக்கு என்ன கொடுத்தார் என அனிருத்திடம் கேட்டார். அதற்கு அனிருத், கமல் சார் எனக்கு விக்ரம் கொடுத்தார் என்று அதிரடியாக பதிலளித்தார். அவரது பதில் ரசிகர்களை நெகிழச் செய்துள்ளது. 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT