செய்திகள்

சமீபத்தில் வெளியான படத்தைப் பார்த்து கண்ணீர் வடித்த கர்நாடக முதல்வர்

14th Jun 2022 06:46 PM

ADVERTISEMENT

 

777 சார்லி படத்தைப் பார்த்து கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கண்ணீர் விட்டு அழுத சம்பவம் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 

ரக்சித் ஷெட்டி நடித்த 777 சார்லி என்ற கன்னட திரைப்படம்கந்த ஜூன் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றவருகிறது. இந்தப் படம் ஒரு மனிதனுக்கும் அவரது வளர்ப்பு நாய்க்கும் இடையேயான பிணைப்பை சொல்லும் படமாக உருவாகியுள்ளது. 

இதன் காரணமாக செல்லப் பிராணிகள் வளர்ப்பவர்களை இந்தப் படம் வெகுவாக கவர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. படம் பார்த்த ரசிகர்கள் கண்களில் கண்ணீருடன் திரையரங்கைவிட்டு வெளியேறிய சம்பவங்களும் நடந்தது. 

ADVERTISEMENT

இதையும் படிக்க | தீபாவளிக்கு வெளியாகவிருக்கும் இரண்டு நடிகர்களின் படங்களையும் வெளியிடும் உதயநிதி ?

இந்த நிலையில் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை நேற்று (ஜூன் 13) 777 சார்லி படத்தை பார்த்தார். படம் பார்த்த அவர் தனது மறைந்த வளர்ப்பு நாயின் நினைவு வந்ததாக கூறி கண்ணீர் விட்டு அழுதார். 

மேலும் படம் குறித்து அவர் பேசியதாவது, ''விலங்குகள் குறித்த படங்கள் நிறைய வந்துள்ளன. ஆனால் இந்த அளவுக்கு உணர்வுப்பூர்வமாக எந்தப் படமும் இல்லை. அந்த நாய் தன் கண்களில் வழியே உணர்வுகளை கடத்துகிறது. இந்தப் படம் மிகவும் நன்றாக உள்ளது. அனைவரும் பாருங்கள். நாயின் அன்பு உண்மையானது என்று தெரிவித்தார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT