செய்திகள்

'விக்ரம்' பட 'ஏஜெண்ட் டீனா' விஜய், அஜித்துடன் இந்தப் பாடல்களில் நடனமாடியிருக்கிறாரா? வைரலாகும் புகைப்படம்

10th Jun 2022 12:20 PM

ADVERTISEMENT

 

'விக்ரம்' படத்தில் ஏஜெண்ட் டீனா என்ற வேடத்தில் நடித்தவர் விஜய் மற்றும் அஜித் படங்களில் நடனமாடியிருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரித்து நடித்துள்ள விக்ரம் திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வர்த்தக ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இந்தப் படத்தில் இடம்பெற்ற அனைத்து கதாப்பாத்திரங்களும் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தனர். அந்த அளவுக்கு இந்தப் படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு கதாப்பாத்திரமும் மிக வலுவாக எழுதப்பட்டிருக்கிறது. 

இதையும் படிக்க | ஆங்கில நடிகைக்கு திருக்குறள் கற்றுத்தரும் சிவகார்த்திகேயன் : பிரின்ஸ் இரண்டாம் பார்வை போஸ்டர்

ADVERTISEMENT

குறிப்பாக இந்தப் படத்தில் ஏஜென்ட் டீனாவாக நடித்திருந்தவரின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. யாரும் எதிர்பாராத தருணத்தில் களமிறங்கி மாஸ் காட்டியிருப்பார். ஏஜெண்ட் டீனாவாக நடித்த வசந்தி தமிழ் படங்களில் நடனக் கலைஞராக ஏராளமான பாடல்களில் நடனமாடியிருக்கிறார். 

பகவதி படத்தில் இடம்பெற்ற அல்லு பாடலில் விஜய்யின் பின்னணியிலும், வில்லன் படத்தில் அடிச்சா என்ற பாடலில் அஜித்தின் பின்னணியிலும் நடனமாடியிருக்கிறார். இதனை புகைப்படமாக எடுத்து ரசிகர்கள் பகிர்ந்துவருகின்றனர். பலருக்கும் இந்த தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

பல ஆண்டுகளாக திரையுலகில் நடனமாடி வந்தாலும், விக்ரம் படமே அவரை வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளது. விக்ரம் படத்துக்கு கிடைத்த வரவேற்பால் நடிகையாக ஒரு வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT