விக்ரம் படத்துக்கு இந்த வாரமும் நல்ல வசூல் கிடைக்கும் என்று உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசன் தயாரித்து நடித்துள்ள விக்ரம் திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த வாரம் தமிழில் பெரிய படங்கள் எதுவும் வெளியாகாததால் விக்ரம் படத்துக்கு வசூல் வேட்டை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: விட்டதைப் பிடித்த விக்ரம் (மாதித்தன்)? தன் முயற்சியில் சற்றும் மனந்தளராமல்...
இந்த நிலையில் விக்ரம் படத்தை தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பாக வெளியிட்ட உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், இந்த வாரமும் விக்ரம் பல வசூல் சாதனைகளை முறியடிக்கும் போல் தெரிகிறது. நம்ப முடியாத வசூல் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | செய்தி வாசிப்பாளர் கண்மணி - 'இதயத்தை திருடாதே' நவீன் திருமணம்: பிரபலங்கள் வாழ்த்து
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரித்து நடித்துள்ள விக்ரம் திரைப்படத்துக்கு விமர்சன ரீதியாகவும், வர்த்தக ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்துவருகிறது. இந்த ஆண்டு வெளியான படங்கள் ரசிகர்களை பெரிதும் கவரவில்லை. இந்த நிலையில் விக்ரம் படத்துக்கு கிடைத்த வரவேற்பு திரையுலகினருக்கு நம்பிக்கையளித்துள்ளது.