செய்திகள்

ஆங்கில இணையத் தொடரில் ரஜினிகாந்த் - ரஹ்மான் பாடல்: நெகிழ்ச்சியை ஏற்படுத்திய எஸ்.பி.பியின் குரல்

10th Jun 2022 12:45 PM

ADVERTISEMENT

 

ஆங்கில இணையத் தொடரானா மிஸ் மார்வெல் தொடரில் ரஜினிகாந்த்தின் லிங்கா படத்தின் ஓ நண்பா பாடல் இடம்பெற்றுள்ளது. 

மிஸ் மார்வெல் என்ற இணையத் தொடர் கடந்த சில நாட்களுக்கு முன்பு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. 

இதையும் படிக்க | நினைவலைகள்: கிரேஸி மோகனைப் பற்றி பிரபலங்கள்

ADVERTISEMENT

இந்தத் தொடரில் ஒரு பகுதியில் காட்சிக்கு பின்னணியில் லிங்கா படத்தில் இடம்பெற்ற ஓ நண்பா பாடல் ஒலிக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்த இந்தப் பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

பாடலை பயன்படுத்தியதற்காக ரஹ்மான் மற்றும் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு நன்றி தெரிவிக்கப்படுகிறது. இதனை ரஜினிகாந்த் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விடியோவாக பகிர்ந்து கொண்டாடிவருகின்றனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT