செய்திகள்

மோகன்லால் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

10th Jun 2022 02:58 PM

ADVERTISEMENT

 

யானை தந்தம் வைத்திருந்த வழக்கில் நடிகர் மோகன்லால் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

மலையாள திரையுலகில் முன்னணி நடிகரான மோகன்லாலின் வீட்டில் கடந்த 2012 ஆம் ஆண்டு வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது கொச்சியில் உள்ள அவரது வீட்டில் 4 யானை தந்தங்கள் கைப்பற்றப்பட்டன. 

மோகன்லால் வீட்டில் கைப்பற்றப்பட்ட யானை தந்தங்கள் வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டன. இதுகுறித்து மோகன்லாலிடம் நடத்தப்பட்ட விசாரணையில் யானை தந்தங்களை யானை வளர்ப்பவர்களிடம் வாங்கியதாக தெரிவித்திருந்தார். 

ADVERTISEMENT

இதையும் படிக்க | ''நம்பமுடியாத வசூல், நிச்சயம்....'' - 'விக்ரம்' குறித்து உதயநிதி அதிரடி கருத்து

இதனையடுத்து யானை தங்தங்களை வீட்டில் வைத்திருந்த குற்றத்திற்காக கேரள மாநில வனத்துறை சார்பில் பெரும்பாவூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் யானை தந்தங்களை வைத்திருக்க மோகன்லால் சிறப்பு அனுமதி பெற்றுள்ளார் என கேரள அரசு நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. 

இந்த வழக்கு பெரும்பாவூர் குற்றவியில் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. கேரள அரசின் மனுவை நிராகரித்த நீதிமன்றம் மோகன்லால் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் உத்தரவு அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT