செய்திகள்

செய்தி வாசிப்பாளர் கண்மணி - 'இதயத்தை திருடாதே' நவீன் திருமணம்: பிரபலங்கள் வாழ்த்து

10th Jun 2022 01:22 PM

ADVERTISEMENT

 

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இதயத்தை திருடாதே தொடர் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நவீன். இந்தத் தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 

தற்போது கண்ட நாள் முதல் என்ற தொடரில் நவீன் நடித்துவருகிறார். இவருக்கும் செய்தி வாசிப்பாளரான கண்மணிக்கும் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இவர்களது திருமணம் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்று கூறப்படுகிறது.

ADVERTISEMENT

இதையும் படிக்க | ஆங்கில இணையத் தொடரில் ரஜினிகாந்த் - ரஹ்மான் பாடல்: நெகிழ்ச்சியை ஏற்படுத்திய எஸ்.பி.பியின் குரல் 

இந்த நிலையில் இருவரது திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று(ஜூன் 9) நடைபெற்றது. வரவேற்பு நிகழ்ச்சியில் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு இருவரையும் வாழ்த்தினர்.

திரைப்பட இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினார். இந்த நிலையில் நவீன் - கண்மணி திருமணம் இன்று (ஜுன் 10) காலை நடைபெற்றது. இதனையடுத்து அவர்களுக்கு ரசிகர்கள் தங்களது சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்து  தெரிவித்துவருகின்றனர்.  

ADVERTISEMENT
ADVERTISEMENT