செய்திகள்

’விக்ரம் வேதா’ ஹிந்தி ரீமேக் படப்பிடிப்பு நிறைவு

10th Jun 2022 04:25 PM

ADVERTISEMENT

 

தமிழில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ‘விக்ரம் வேதா’ திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கின் படப்பிடிப்பு இன்று நிறைவடைந்துள்ளது.

கடந்த 2017-ஆம் ஆண்டு இயக்குநர்கள் புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் மாதவன் நடிப்பில் வெளியான ‘விக்ரம் வேதா’ திரைப்படம் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டதோடு வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றது. 

இதையும் படிக்க | 'கைதி' படத்தில் நீக்கப்பட்ட காட்சி - லோகேஷ் பகிர்ந்த சுவாரசியத் தகவல்

ADVERTISEMENT

பின் அப்படம் சில மொழிகளில் ரீமேக் ஆக உள்ளதாக தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்  ஹிந்தியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் துவங்கப்பட்ட  ‘விக்ரம் வேதா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று நிறைவடைந்துள்ளது.

ஹிந்தியிலும் ‘விக்ரம் வேதா’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் புஷ்கர்-காயத்திரி இயக்கத்தில் விஜய் சேதுபதி கதாப்பாத்திரத்தில் ஹ்ரித்திக் ரோஷனும் மாதவன் கதாப்பாத்திரத்தில் சயிப் அலிகானும் நடித்துள்ளனர்.

ஒய் நாட் ஸ்டுடியோஸ், ரிலையன்ஸ் நிறுவனம், டி-சீரிஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT