செய்திகள்

'கைதி' படத்தில் நீக்கப்பட்ட காட்சி - லோகேஷ் பகிர்ந்த சுவாரசியத் தகவல்

10th Jun 2022 03:42 PM

ADVERTISEMENT

 

கைதி படத்தில் நீக்கப்பட்ட காட்சி குறித்து லோகேஷ் கனகராஜ் பகிர்ந்துள்ளார். 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், பகத் பாசில், விஜய் சேதுபதி, நரேன், செம்பன் வினோத், காளிதாஸ் ஜெயராம், அர்ஜுன் தாஸ், சூர்யா, காயத்ரி உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படம் கடந்த ஜூன் 3 ஆம் தேதி வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. 

இந்தப் படத்துக்கு அனிருத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை பெரும் பலமாக அமைந்திருந்தது. கைதி படக் களத்தை விக்ரம் படத்தில் இயக்குநர் லோகேஷ் மிக சுவாரசியமாக கொண்டுவந்திருந்தார்.

ADVERTISEMENT

இதையும்  படிக்க | மோகன்லால் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

ஆங்கில படங்களில் இந்த முறை இருந்தாலும் இந்திய சினிமாவில் ஒரு படத்தின் களம் மற்றொரு படத்தில் பயன்படுத்தப்படுவது இதுவே முதன்முறை. இதன் காரணமாக விக்ரம் படத்துக்கு இந்தி அளவில் பாராட்டுக்கள் குவிந்துவருகிறது. 

இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் விக்ரம் படம் குறித்து தனியார் யூடியூப் பக்கத்துக்கு பேட்டியளித்தார். அதில், ''கைதி படத்தில் கார்த்தி ஒரு பை வைத்திருப்பார். அதில் விருதுகள் இருக்கும். டில்லியாக நடித்திருக்கும் கார்த்தி சிறையில் கபடிப் போட்டியில் வென்று பெற்ற விருதுகள் அவை. டில்லியின் முன் கதையில் அது ஒரு முக்கிய பங்கு வகிக்கும். இதுகுறித்து கைதி 2 பாகத்தில் விரிவாக காட்டடப்படும்'' என்று பேசினார்.  

ADVERTISEMENT
ADVERTISEMENT