செய்திகள்

முதல் முத்தம் ! திருமண புகைப்படத்தை வெளியிட்ட விக்னேஷ் சிவன்: ஜோடி எப்படி ?

9th Jun 2022 02:48 PM

ADVERTISEMENT

 

இயக்குநர் விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் திருமணம் இன்று நடைபெற்ற நிலையில், தனது திருமண புகைப்படத்தை விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார். புகைப்படத்தில் விக்னேஷ் சிவன் நயன்தாராவுக்கு காதலுடன் முத்தமிடுகிறார்.

இதையும் படிக்க | ''தங்கமே...'' மணக்கோலத்தில் விக்னேஷ் சிவன் - நயன்தாரா (புகைப்படங்கள்) 

இருவரது திருமணம் இன்று (ஜூன் 9) காலை மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் வெகு விமர்சையாக நடைபெற்றது. திருமணத்தின்போது நடிகர் ஷாருக்கான், ரஜினிகாந்த், விஜய், அஜித், கார்த்தி, இயக்குநர் அட்லி, தயாரிப்பாளர் போனி கபூர் உள்ளிட்ட திரையுலகினர் கலந்துகொண்டனர். 

ADVERTISEMENT

இதையும் படிக்க | விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணத்தில் குடும்பத்துடன் பங்கேற்ற அஜித்

திருமணத்தின் போது புகைப்படம் எடுக்க அனுமதிக்கப்படாததால் இருவரது திருமண புகைப்படங்கள் வெளியாகவில்லை. இந்த நிலையில் இயக்குநர் விக்னேஷ் சிவன் புகைப்படம் பகிர்ந்துள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT