செய்திகள்

வெளியானது சிவகார்த்திகேயனின் 'பிரின்ஸ்' பட முதல் பார்வை போஸ்டர்!

9th Jun 2022 06:11 PM

ADVERTISEMENT

 

சிவகார்த்திகேயன் நடித்த டான் திரைப்படம் கடந்த மே 13 ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. 

டாக்டர் படத்தைத் தொடர்ந்து இந்தப் படமும் ரூ.100 கோடி வசூலித்ததாக அறிவிக்கப்பட்டது. இதனால் சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் அவர் தற்போது தெலுங்கில் வெற்றிபெற்ற ஜதி ரத்னாலு பட இயக்குநர் அனு தீப் இந்தப் படத்தில் நடித்து வருகிறார்.

இதையும் படிக்க | ''ரொம்ப திமிரா நடந்துக்கிட்டாங்க'' - பீஸ்ட் நாயகி குற்றச்சாட்டு

ADVERTISEMENT

தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் இந்தப் படத்துக்கு பிரின்ஸ் என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் மரியா, சத்யராஜ், பிரேம்ஜி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தமன் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். இந்தப் படம் வருகிற ஆகஸ்ட் 31 அன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த நிலையில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT