பிரபல நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் இன்று திருமணம் செய்துகொண்டார்கள்.
நானும் ரெளடி தான் படத்தின் உருவாக்கத்தின் போது விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் காதலர்கள் ஆனார்கள். சமீபத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் உருவான காத்து வாக்குல ரெண்டு காதல் படம் வெளியானது.
இதையும் படிக்க | ''தங்கமே...'' மணக்கோலத்தில் விக்னேஷ் சிவன் - நயன்தாரா (புகைப்படங்கள்)
இயக்குநர் விக்ஷேன் சிவன் லால்குடியைச் சேர்ந்தவர். நயன்தாரா கேரளாவைச் சேர்ந்தவர்.
இந்நிலையில் நயன்தாரா - விக்ஷேன் சிவன் ஆகிய இருவரின் காதல் திருமணம் மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் இன்று நடைபெற்றது. பிரபல நடிகர்கள் ரஜினிகாந்த், ஷாருக் கான், விஜய் சேதுபதி, சரத்குமார் மற்றும் இயக்குநர்கள் மணி ரத்னம், அட்லி உள்ளிட்ட பல பிரபலங்கள் திருமணத்தில் பங்கேற்றார்கள்.