விக்ரம் படம் வெற்றியடைந்ததையடுத்து நடிகர் சூர்யாவுக்கு ரோலக்ஸ் கைக்கடிகாரத்தை பரிசளித்தார் கமல்ஹாசன்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன், விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான விக்ரம் படம் ஜூன் 3 அன்று திரையரங்குகளில் வெளியாகி தற்போது பெரும் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
குறிப்பாக, இப்படத்தின் வசூலும் விரைவில் ரூ. 200 கோடியைத் தாண்டும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா கமல் - லோகேஷ் கூட்டணி? விக்ரம் | திரைவிமர்சனம்
இந்நிலையில், நடிகர் கமல்ஹாசனின் திரைவாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியை அளித்ததால் அதற்கு மதிப்பளிக்கும் விதமாக இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு காரும், அவருடைய உதவி இயக்குநர்களுக்கு இருசக்கர வாகனத்தையும் பரிசளித்த கமல்ஹாசன் விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கதாப்பாத்திரத்தில் தோன்றி அசரவைத்த நடிகர் சூர்யாவுக்கு ரோலக்ஸ் கைக்கடிகாரத்தைப் பரிசளித்துள்ளார்.
இதையும் படிக்க: கமலைக் காப்பாற்றவா, விக்ரமில் மாஸ் ஹீரோக்கள்?
அதைப் பெற்றுக்கொண்ட சூர்யா “இப்படியான தருணம் வாழ்க்கையை அழகாக மாற்றுகிறது. மிக்க நன்றி கமல்ஹாசன் அண்ணா” எனத் தெரிவித்துள்ளார்.