செய்திகள்

இது கைதி 2-வில் விரிவாக விவரிக்கப்படும்: லோகேஷ் கனகராஜ் ட்விஸ்ட்

8th Jun 2022 10:32 PM

ADVERTISEMENT


கைதி படத்தில் கொல்லப்பட்ட அன்பு கதாபாத்திரம் விக்ரம் படத்தில் வந்தது எப்படி என்ற கேள்விக்கு கைதி 2-வில் விரிவாக விவரிக்கப்படும் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பதிலளித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்துள்ள விக்ரம் திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதைக் கொண்டாடும் விதமாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ், துணை இயக்குநர்கள் மற்றும் நடிகர் சூர்யாவிற்கு கமல்ஹாசன் பரிசுகளை வழங்கி வருகிறார்.

இந்த நிலையில், லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்கள் எழுப்பும் கேள்விகளுக்குப் பதிலளித்து வருகிறார்.

இதையும் படிக்கவிரைவில் ‘ஜோக்கர் 2’ படப்பிடிப்பு தொடக்கம்

ADVERTISEMENT

அப்போது, கைதி திரைப்படத்தில் உயிரிழந்த அர்ஜுன் தாஸ் கதாபாத்திரம் உயிருடன் இருப்பது எப்படி, நம்ப முடியவில்லை என ட்விட்டர் பக்கத்தில் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்து லோகேஷ் பதிவிட்டதாவது:

"கைதி திரைப்படத்தில் நெப்போலியனால் அன்புவின் (அர்ஜுன் தாஸ்) தாடை மட்டும்தான் உடைக்கப்பட்டது. அதனால்தான் விக்ரம் திரைப்படத்தில் தையல் அச்சு இருக்கும். கைதி 2 திரைப்படத்தில் இதுபற்றி மேலும் விவரிக்கப்படும்."

கைதி 2 குறித்து லோகேஷ் பேசியிருப்பது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

Tags : Kaithi 2
ADVERTISEMENT
ADVERTISEMENT