செய்திகள்

லோகேஷ் கனகராஜுக்கு சொகுசு காரைப் பரிசளித்த கமல்

7th Jun 2022 03:40 PM

ADVERTISEMENT

 

விக்ரம் படம் வெற்றியடைந்ததையடுத்து இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு சொகுசு காரைப் பரிசளித்தார் கமல் ஹாசன்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன், விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில் நடித்த விக்ரம் படம் ஜூன் 3 அன்று வெளியானது. படம் வெளிவந்த நாள் முதல் ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. பெரும்பாலான திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. நாளுக்கு நாள் திரையரங்குக் காட்சிகளின் எண்ணிக்கை அதிகமாகி வருவதால் வசூலும் அதிகரித்து வருகிறது. முதல் மூன்று நாள்களில் ரூ. 150 கோடி வசூலாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

இதையும் படிக்க: கமலைக் காப்பாற்றவா, விக்ரமில் மாஸ் ஹீரோக்கள்?

இதையும் படிக்க: எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா கமல் - லோகேஷ் கூட்டணி? விக்ரம் | திரைவிமர்சனம்

ADVERTISEMENT

கமல் ஹாசனின் திரைவாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியை அளித்ததால் அதற்கு மதிப்பளிக்கும் விதமாக இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்குப் பரிசளித்துள்ளார் கமல் ஹாசன். ஜப்பானின் டொயோட்டா நிறுவனத்துக்குச் சொந்தமான சொகுசு காரான லெக்ஸஸை லோகேஷ் கனகராஜுக்குப் பரிசாக வழங்கிக் கெளரவித்துள்ளார்.

Tags : Kamal Haasan
ADVERTISEMENT
ADVERTISEMENT