செய்திகள்

ஜீவா நடிக்கும் ‘கோல்மால்’ படத்தின் முதல்பார்வை போஸ்டர் வெளியானது

6th Jun 2022 03:34 PM

ADVERTISEMENT

 

பொன்குமரன் இயக்கத்தில் நடிகர் ஜீவா, சிவா இணைந்து நடிக்கும்  ‘கோல்மால்’ படத்தின் முதல்பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது. 

ஜாகுவர் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் நடிகர் ஜீவா, சிவா, தன்யா, யோகி பாபு, பயல் ராஜ்புட் ஆகியோர் நடித்துள்ளனர். பொன்குமரன் அவர்களது முதல் படம். ஆனால் தமிழ், கன்னட படங்களுக்கு உதவி இயக்குநராக இருந்து வந்துள்ளார். லிங்கா படத்தின் கதையை எழுதியவரும் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.  

சிங்கம் மற்றும் புலிக்கு நடுவில் யோகி பாபு இருப்பது போலான போஸ்டர் கவனத்தை பெறுகிறது. 

ADVERTISEMENT

இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில், “காத்திருப்பு முடிந்தது. மல்டி ஸ்டாரர் காமிடித் திருவிழா கோல்மால் பர்ஸ்ட்லுக் இதோ” என தெரிவித்து இருந்தது. 

இப்படம் செப்டம்பர் மாதத்தில் வெளியாகுமென சொல்லப்படுகிறது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT