செய்திகள்

தனுஷின் திருச்சிற்றம்பலம்: நாளை வருகிறது அப்டேட்!

6th Jun 2022 07:49 PM

ADVERTISEMENT


மித்ரன் ஆர். ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திருச்சிற்றம்பலம் படத்தின் புதிய அப்டேட் நாளை (செவ்வாய்க்கிழமை) அறிவிக்கப்படவுள்ளது.

திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷ், பிரகாஷ் ராஜ், பாரதிராஜா, நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மித்ரன் ஆர். ஜவஹர் இயக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் படத்தைத் தயாரிக்கிறது.

இதையும் படிக்கஅஜித்தின் வளர்ச்சியும் குணமும்: சக நடிகர் நெகிழ்ச்சி

வெறும் 50 நாள்கள் மட்டுமே நடைபெற்ற படப்பிடிப்பு, கடந்தாண்டு அக்டோபரில் நிறைவடைந்தது. இதனால், ஏப்ரல், மே மாதத்தில் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. பின்னர், படம் ஜூலை 1-ம் தேதி வெளியாகும் தகவல்கள் வெளியாகின. இதனிடையே, திருச்சிற்றம்பலம் படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடவுள்ளதாக உதயநிதி ஸ்டாலின் அறிவித்தார்.

ADVERTISEMENT

இந்த நிலையில், படத்தைப் பற்றிய புதிய அப்டேட் நாளை மாலை 6 மணிக்கு அறிவிக்கப்படவுள்ளதாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT