செய்திகள்

‘என்னமா’ ராமர் அரசு அதிகாரியா? ஆச்சரியத்தில் ரசிகர்கள்

2nd Jun 2022 04:09 PM

ADVERTISEMENT

தனியார் தொலைக்காட்சிகளின் காமெடி நிகழ்ச்சிகளில் பங்குபெற்று பிரபலமானவர் ராமர். 

குறிப்பாக ‘சொல்வதெல்லாம் பொய் மேல வைக்காத கை’ என்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் ராமர் பேசிய ‘என்னம்மா இப்படி பண்றீங்களேமா’ என்கிற வசனத்தை ரசிக்காத ஆள்கள் குறைவு.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மட்டுமல்லாது ‘கோமாளி’ ‘தில்லுக்கு துட்டு 2’ ‘சிக்ஸர்’ ‘எதற்கும் துணிந்தவன்’ உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தன் டிவிட்டர் பக்கத்தில் "கொட்டாம்பட்டி ஒன்றிய கிராம ஊராட்சிகளில் நடைபெறும் ஆய்வின் போது 18 சுக்காம்பட்டி கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றும் சின்னத்திரை கலைஞர் ராமர் அவர்களை சந்திதேன். மகிழ்ச்சி" எனப் பதிவிட்டிருந்தார்.

ADVERTISEMENT

இதன் மூலம், ராமர் அரசு அதிகாரியாக பணியாற்றுகிறார் என்பதைத் தெரிந்துகொண்ட அவருடைய ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

 

இன்று கொட்டாம்பட்டி ஒன்றிய கிராம ஊராட்சிகளில் நடைபெறும் ஆய்வின் போது 18 சுக்காம்பட்டி கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றும் சின்னத்திரை கலைஞர் விஜய்டிவி புகழ் ராமர் அவர்களை சந்திதேன்.

மகிழ்ச்சி .@vijaytelevision

#VijayTv #Ramar #madurai #KPY pic.twitter.com/cFmA461Ds7

— Su Venkatesan MP (@SuVe4Madurai) May 30, 2022 ">http://

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT