செய்திகள்

‘சாம்ராட் பிருத்விராஜ்' திரைப்படத்திற்கு வரிவிலக்கு அறிவிக்கும் பாஜக மாநில அரசுகள்

2nd Jun 2022 07:38 PM

ADVERTISEMENT

நடிகர் அக்‌ஷய் குமார் நடித்துள்ள ‘சாம்ராட் பிரித்விராஜ்’  திரைப்படத்திற்கு வரிவிலக்கு அளிக்கப்படுவதாக மத்தியப்பிரதேச அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சந்திர பிரகாஷ் திவேதி இயக்கத்தில் மன்னர் பிரித்விராஜ் செளகான் வாழ்வைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் ‘சாம்ராட் பிரித்விராஜ்’. இந்தத் திரைப்படத்தில் ப்ரித்விராஜ் கதாபாத்திரத்தில் நடிகர் அக்‌ஷய் குமாரும், அவருக்கு ஜோடியாக 2017ஆம் ஆண்டு உலக அழகிப் பட்டம் வென்ற மனுஷி சிகில்லரும் நடித்துள்ளார்.  மிகுந்த பொருள் செலவில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படம் ஜூன்-3ஆம் தேதி வெளியாக உள்ளது. 

இதையும் படிக்க | ’டைட்டானிக்-காதலும் கவுந்து போகும்' திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

இந்நிலையில் இந்தத் திரைப்படத்திற்கு வரிவிலக்கு அளிக்கப்படுவதாக மத்தியப் பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் செளகான் வியாழக்கிழமை அறிவித்தார்.

ADVERTISEMENT

இதுதொடர்பாக அவர் தனது சுட்டுரைப் பக்கத்தில், “மாபெரும் போர்வீரன் பேரரசர் பிருத்விராஜ் செளகானின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட நடிகர் அக்ஷய்குமார் நடித்துள்ள ”சாம்ராட் பிரித்விராஜ்” திரைப்படத்தை வரி விலக்குடன் திரையிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இளைஞர்கள் பேரரசரின் வாழ்க்கையை அறிந்துகொள்ளவும், அவர்களிடம் தாய்நாட்டின் மீது அதிக பற்றுதலை ஏற்படுத்தவும் முடியும்" எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக உத்தரப்பிரதேச மாநில அரசு சாம்ராட் ப்ரித்விராஜ் திரைப்படத்திற்கு வரிவிலக்கு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT