செய்திகள்

பழைய யுவன் வேணும் சார் - இயக்குநர் கோரிக்கை

30th Jul 2022 12:15 PM

ADVERTISEMENT

 

யுவன் இசையில் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்துவரும் லவ் டுடே ப்ரமோ விடியோ வைரலாகி வருகிறது. 

கோமாளி படத்தின் மூலம் கவனம் ஈர்த்த பிரதீப் ரங்கநாதன் அடுத்ததாக லவ் டுடே என்ற படத்தை இயக்கி நடித்துவருகிறார். இந்தப் படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. 

யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் சில நாட்களுக்கு முன் வெளியாகியிருந்தது. 

ADVERTISEMENT

இதையும் படிக்க | கார்த்தியின் விருமன் பட வெளியீட்டுத் தேதி மாற்றம் 

இந்த நிலையில் இந்தப் படத்தின் முதல் பாடல் வருகிற ஆகஸ்ட் 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதற்கான ப்ரமோ விடியோவில், இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் பழைய யுவன் வேணும் சார் என கேட்க, தனது சிறு வயது படத்தை அவருக்கு யுவன் வழங்குகிறார். இதனையடுத்து ஏமாற்றமடையும் பிரதீப் புதுசாவே போய்டலாம் என்கிறார். 

பிரதீப் பாடல் வரிகளை சொல்ல, யுவன் இசையமைக்கிறார். இந்தப் பாடல் காதல் பாடலாக உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் இவானா நாயகியாக நடிக்க, சத்யராஜ், ராதிகா சரத்குமார்,  யோகி பாபு, ரவீனா, ஃபைனலி பரத், ஆஜித், விஜய் வரதராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT