செய்திகள்

கார்த்தியின் விருமன் பட வெளியீட்டுத் தேதி மாற்றம்

30th Jul 2022 11:43 AM

ADVERTISEMENT

 

கார்த்தியின் விருமன் பட வெளியீட்டுத் தேதி மாற்றப்பட்டுள்ளதாக 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. 

2டி எண்டர்டெயின்மென்ட் சார்பில் சூர்யா, ஜோதிகா தயாரிக்க கார்த்தி நாயகனாக நடித்துள்ள படம் விருமன். கொம்பன் படத்துக்கு பிறகு இயக்குநர் முத்தையாவுடனும், கடைகுட்டி சிங்கம் படத்துக்கு பிறகு 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடனும் கார்த்தி இணைந்துள்ளதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி நடித்துள்ளார். முதல் படம் என்பதால் இந்தப் படத்தை அவர் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையில் இந்தப் படத்திலிருந்து வெளியான கஞ்சா பூ கண்ணால பாடல் மிகவும் பிரபலமானது. 

ADVERTISEMENT

கார்த்தியின் விருமன் வருகிற ஆகஸ்ட் 31 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்தப் படத்தின் வெளியீட்டுத் தேதி மாற்றப்பட்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதியே வெளியாகும் என்று 2டி நிறுவனம் அறிவித்துள்ளது. 

இந்தப் படத்தில் ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், கருணாஸ், சூரி, வடிவுக்கரசி, சரண்யா பொன்வண்ணன், சிங்கம்புலி, ஆர்கே.சுரேஷ், மனோஜ் பாரதிராஜா, வசுமித்ரா, மைனா நந்தினி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். செல்வகுமார் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT