செய்திகள்

‘படிப்புங்கறது கோயில் பிரசாதம் மாதிரி’: வெளியானது வாத்தி திரைப்பட டீசர்

28th Jul 2022 08:44 PM

ADVERTISEMENT

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள வாத்தி திரைப்படத்தின் டீசரை படக்குழுவினர் வியாழக்கிழமை வெளியிட்டனர். 

தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் படம் வாத்தி. தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் உருவாகிவரும் இந்தப் படத்துக்கு தெலுங்கில் சார் எனப் பெயரிடப்பட்டுள்ளது. 

இதையும் படிக்க | ‘செஸ் ஒலிம்பியாட் இந்தியாவிற்கு பெருமைமிகு தருணம்’: முதல்வர் மு.க.ஸ்டாலின்

வாத்தி படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இந்தப் படத்துக்கு இசையமைக்க, யுவராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

ADVERTISEMENT

இந்தப் படத்தில் தனுஷ் பள்ளி ஆசிரியராக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே இந்தப் படத்தின் போஸ்டர் வெளியாகியிருந்த நிலையில் வியாழக்கிழமை படத்தின் டீசரை படக்குழுவினர் வியாழக்கிழமை வெளியிட்டனர்.

இதையும் படிக்க | சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடக்கி வைத்தார் பிரதமர் மோடி

 இந்தப் படத்தின் டீசர் நாளை (ஜூலை 28) மாலை 6 மணிக்கு வெளியாகும் என இந்தப் படத்தை தயாரித்துவரும் சித்தாரா எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT