செய்திகள்

பிரபு தேவாவுடன் இணையும் பாக்யலட்சுமி நாயகி

27th Jul 2022 02:46 PM

ADVERTISEMENT

 

பிரபு தேவாவின் புதிய படத்தில் பாக்யலட்சுமி தொடர் மூலம் கவனம் ஈர்த்த சுசித்ரா நடிக்கவிருக்கிறார். 

கன்னட நடிகையான சுசித்ரா விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்யலட்சுமி தொடரின் மூலம் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துவருகிறார். இந்த தொடர் டிஆர்பியில் முதலிடத்தில் உள்ளது. 

அந்த அளவுக்கு ரசிகர்களிடையே இந்த தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துவருகிறது. குறிப்பாக பாக்யலட்சுமியின் கணவராக நடித்துவரும் கோபி குறித்த மீம்கள் சமூக வலைதளங்களில் அடிக்கடி டிரெண்டாகி வருகின்றன. 

ADVERTISEMENT

இதையும் படிக்க | ''அன்றைய சரித்திரம்... '' - உதயநிதி பட அறிவிப்பு விடியோவை வெளியிட்ட கமல்

இந்த நிலையில் பாக்யலட்சுமியாக நடித்துவரும் சுசித்ராவுக்கு திரைப்பட வாய்ப்பு கிடைத்துள்ளதாம். பிரபு தேவா நடிக்கவிருக்கும் புதிய படத்தில் சுசித்ரா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.  

ADVERTISEMENT
ADVERTISEMENT