செய்திகள்

தனக்கு ஏற்பட்ட உடல் நல பாதிப்பு குறித்து ஸ்ருதி ஹாசன் விளக்கம் - ''எனக்கு இருக்கும் பிரச்னை..''

7th Jul 2022 02:32 PM

ADVERTISEMENT

 

நடிகை ஸ்ருதி ஹாசனுக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் அவர் விடியோ மூலம் விளக்கமளித்துள்ளார். 

நடிகை ஸ்ருதி ஹாசன் சில நாட்களுக்கு முன்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் உடற்பயிற்சி செய்யும் விடியோவைப் பகிர்ந்து பிசிஒஎஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்திருந்தார். 

இதனையடுத்து ஸ்ருதி ஹாசன் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. சமூக வலைதளங்களில் அவர் விரைவில் குணமடைய ரசிகர்கள் வாழ்த்து தெரிவிக்க தொடங்கினர்.

ADVERTISEMENT

இந்த நிலையில் இதுகுறித்து ஸ்ருதி ஹாசன் விளக்கமளித்துள்ளார். அவர் பேசியிருப்பதாவது, நான் தொடர்ச்சியாக படங்களில் நடித்துவருகிறேன். சிறப்பான நேரங்களை அனுபவித்துவருகிறேன். நான் ஒன்றை பற்றி விளக்கம் தெரிவிக்க விரும்புகிறேன். நான் சில நாட்களுக்கு முன் உடற்பயிற்சி குறித்தும் எனக்கு பிசிஒஎஸ் எனப்படும் சினைப்பை நோய்குறி இருப்பதாக தெரிவித்திருந்தேன். 

அதற்கு நான் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருக்கிறேன் என்றோ, தீவிர பாதிப்புக்குள்ளாகியிருக்கிறேன் என்றோ பொருளல்ல. 

என்னை சிலர் தொலைபேசி வாயிலாக அழைத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறீர்களா எனக் கேட்கிறார்கள். நிச்சயமாக இல்லை. நான் நலமுடன் இருக்கிறேன். எனக்கு இந்தப் பிரச்னை ஒரு ஆண்டுகளாக இருக்கிறது. உங்களின் அக்கறைக்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார். 

Tags : Shruti Haasan
ADVERTISEMENT
ADVERTISEMENT