செய்திகள்

போலி உயில் மூலம் நடிகர் பிரபு, ராம்குமார் எங்களை ஏமாத்திட்டாங்க - சிவாஜியின் மகள்கள் பரபரப்பு புகார்

7th Jul 2022 03:36 PM

ADVERTISEMENT


போலி உயில் மூலமாக நடிகர் பிரபு மற்றும் ராம குமார் தங்களை ஏமாற்றிவிட்டதாக நடிகர் சிவாஜி கணேசனின் மகள்கள் புகார் தெரிவித்துள்ளனர். 

நடிகர் திலகம் என ரசிகர்களால் அழைக்கப்படும் சிவாஜி கணேசன் கடந்த 2001 ஆம் ஆண்டு காலமானார். அவருக்கு நடிகர் பிரபு, ராம் குமார் என்ற இரு மகன்களும் சாந்தி, ராஜ்வி என இரு மகள்களும் உள்ளனர். 

சென்னை உயர் நீதிமன்றத்தில் சிவாஜியின் மகள்களான சாந்தி மற்றும் ராஜ்வி வழக்கு ஒன்றைத் தொடுத்துள்ளனர். அதில் சிவாஜி கணேசனின் மறைவுக்குப் பின் ரூ.270 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை ராம் குமாரும் பிரபுவும் முறையாக நிர்வகிக்கவில்லை எனவும், வீடுகளின் வாடகைப் பங்கைத் தங்களுக்கு வழங்காமல் ஏமாற்றியதாகவும் அந்த மனுவில் தெரிவித்துள்ளனர். 

இதையும் படிக்க | ''இளவரசி...'': 'குந்தவை' திரிஷாவை கலாய்க்கும் 'வந்தியத்தேவன்' கார்த்தி - பொன்னியின் செல்வன் புதிய போஸ்டர்

ADVERTISEMENT

மேலும் தங்களுடைய தந்தை சிவாஜி கணேசன் சம்பாதித்த சொத்து தொடர்பாக உயிர் எழுதி வைக்காத நிலையில், பிரபு மற்றும் ராம்குமார் ஆகிய இருவரும் போலியான உயில் தயாரித்து தங்களை ஏமாற்றிவிட்டதாகவும் தங்கள் தாய் வழி சொத்திலும் தங்களுக்கு பங்கு வழங்கவில்லை எனவும்  குறிப்பிட்டுள்ளனர். 

கோபாலபுரத்தில் இருந்த வீட்டை தங்களுக்கு தெரியாமல் பிரபு மற்றும் ராம் குமார் விற்றுவிட்டதாகவும் ராயப்பேட்டையில் உள்ள நான்கு வீடுகள் மூலம் வரும் வாடகையில் தங்களுக்கு எந்த பங்கும் வழங்கவில்லை எனவும் தெரிவித்துள்ளனர். 

மேலும் இந்து வாரிசுரிமை சட்டத்தில் 2005 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட திருத்தத்தின் படி, தந்தை சிவாஜி கணேசனின் சொத்துக்களில் தங்களுக்கும் உரிமை உள்ளதால் அவற்றைப் பாகப்பிரிவினை செய்து தர உத்தரவிட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர். 
  

ADVERTISEMENT
ADVERTISEMENT