செய்திகள்

பிரபல நடிகரின் ஓடிடி தளத்தில் வெளியாகவிருக்கும் விஜய் சேதுபதியின் 'மாமனிதன்'

6th Jul 2022 11:43 AM

ADVERTISEMENT

 

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த மாமனிதன் படத்தின் ஓடிடி வெளியீடு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 

யுவன் ஷங்கர் ராஜா தனது ஒய்எஸ்ஆர் ஃபிலிம்ஸ் சார்பாக தயாரித்த படம் மாமனிதன். சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி முதன்மை வேடத்தில் நடித்த இந்தப் படத்துக்கு இளையராஜா - யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இந்தப் படத்துக்கு இசையமைத்திருந்தனர். 

ஸ்டுடியோ 9 சார்பாக இந்தப் படத்தை ஆர்கே சுரேஷ் வெளியிட்டார். கடந்த ஜூன் 24 ஆம் தேதி வெளியான இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. 

ADVERTISEMENT

இதையும் படிக்க | ஷாருக்கானுக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி?

இந்தப் படம் பார்த்த நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர்கள் ஷங்கர், பாரதிராஜா, மிஷ்கின் உள்ளிட்டோர் இயக்குநர் சீனுராமசாமியை பாராட்டினர். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் படத்தின் இசையமைப்பாளர்கள் இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா பங்கேற்காதது சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இந்தப் படம் நடிகர் அல்லு அர்ஜுனின் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் ஜூலை 15 ஆம் தேதி வெளிவருவதையொட்டி சென்னை தாகூர் பிலிம் சென்டரில் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது.

இதில் அரசியல் கட்சி தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், ஆர்.பத்ரி, இராஜசேகரன் ( மார்க்சிஸ்ட்) காங்கிரஸ் கட்சி சார்பாக எஸ்.திருநாவுக்கரசர், மனிதநேய மக்கள் கட்சி தலைவர்கள் ஜவாஹிருல்லா, அப்துல்சமத், பிரபல பத்திரி்கையாளர் விஜயசங்கர், தமிழ்வேள்வி சதுரர் சத்தியவேல்  முருகனார், திரைக் கலைஞர்கள் விமல், கலா, இயக்குநர்கள் பிருந்தாசாரதி, மணிபாரதி, தமயந்தி, தமிழக மக்கள் ஒற்றுமை மேடை க.உதயகுமார், லயோலா திருச்சபை தந்தை, ஜான், காட்சியியல் ஊடகத்துறை பேராசிரியர் சித்ரா, சமரசம் இதழாசிரியர் சிக்கந்தர் கவிஞர்கள் அய்யப்பமாதவன், ரத்திகா மாஸ்டர் படத்தயாரிப்பாளர் பிரிட்டோ என பங்கேற்று அவரவர் பார்வையில் ஆகா ஓடிடி வெளியீட்டிற்கு வாழ்த்துகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து இயக்குநர் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், மாமனிதன்  திரைப்படத்தை ஆஹா இணைய வழியில் விரைவில் சந்திக்கலாம். என்னை ட்விட்டரில் தொடர்ந்து வரும் நெஞ்சங்கள் ஒவ்வொருவரும்  இப்படைப்பைக் காணவேண்டுமென விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT