செய்திகள்

நடிகர் விஜய்யின் 'வாரிசு' படக் கதை இதுதானா ? - வசனகர்த்தா விளக்கம்

6th Jul 2022 02:56 PM

ADVERTISEMENT


நடிகர் விஜய் நடித்துவரும் வாரிசு படத்தின் கதை வெளியாகியுள்ள நிலையில் அந்தப் படத்தின் வசனகர்த்தாவும் பாடலாசிரியருமான விவேக் விளக்கமளித்துள்ளார். 

நடிகர் விஜய் தற்போது தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி கிரியேஷன்ஸ் சார்பாக தில் ராஜு தயாரிக்கிறார். 

விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்க, ஷாம், சரத்குமார், குஷ்பு, தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த், சங்கீதா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தமன் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் விஜய் ஒரு பாடல் பாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதையும் படிக்க | வடிவேலுவுக்கு மதிப்பளித்து முடிவை மாற்றிய யோகி பாபு படக்குழு

ADVERTISEMENT

இந்த நிலையில் இந்தப் படத்தின் கதை என ஒரு தகவல் உலா வருகிறது. அதன்படி, கோடீஸ்வரர் ஒருவர் கொல்லப்படுகிறார். அவரது வளர்ப்பு மகன் தந்தையைக் கொன்றவர்களை கண்டுபிடிப்பதுதான் கதை எனக் கூறப்படுகிறது. 

இந்த நிலையில் பாடலாசிரியர் விவேக் இந்தத் தகவலை மறுத்துள்ளார். அவரது பதிலில், நீங்கள் ஒரு ஆன்லைன் ஏமாளி என பதிலளித்துள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT