செய்திகள்

மாமனார் மீது பரபரப்பு புகார் கூறிய அண்ணாத்த நடிகை

6th Jul 2022 04:09 PM

ADVERTISEMENT

 

மாமனார் உள்ளிட்ட தனது கணவரின் குடும்பத்தார் தன்னை துன்புறுத்துவதாக செய்தியாளர்களிடம் நடிகை ரஞ்சனா நாச்சியார் தெரிவித்தார். 

அண்ணாத்த, நட்பே துணை, எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் துணை நடிகை ரஞ்சனா நாச்சியார். இவர் சில சின்னத்திரை தொடர்களிலும் நடித்துவருகிறார். 

இவருக்கும் சுரேஷ் குமார் என்பவருக்கும் 17 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இருவருக்கும் பதின் வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர். 

ADVERTISEMENT

இதையும் படிக்க | டி.ராஜேந்தரின் உடல் நிலை குறித்து வெளியான முக்கிய தகவல்

இந்த நிலையில் இவர் சென்னை மாங்காடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தனது மாமனார் சரவணவேல் அவரது மனைவி ஆகியோர் மீது புகார் அளித்தார்.

பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித் ரஞ்சனா, மன நிலை சரியில்லாத நபரை எனக்கு திருமணம் செய்து வைத்து, என்னை ஏமாற்றிவிட்டனர். என் கணவர் தற்போது, மன நல சிகிச்சை பெற்றுவருகிறார். என் மாமனார் சரவணவேலும் மனைவியுடன் என்னை கொடுமைப்படுத்துகிறார். 

இதுபற்றி காவல்துறையினர் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. என் மாமனார் என்னைக் காயப்படுத்தியதில் நான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன் என்று கூறியுள்ளார். 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT