செய்திகள்

இந்த முக்கிய தினத்தில் வெளியாகிறதா நடிகர் அஜித்தின் ஏகே 61 பட முதல் பார்வை போஸ்டர் ?

6th Jul 2022 01:16 PM

ADVERTISEMENT

 

வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துவரும் ஏகே 61 படத்தின் முதல் பார்வை போஸ்டர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 

நேர்கொண்ட பார்வை, வலிமை படத்துக்கு பிறகு நடிகர் அஜித், இயக்குநர் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் கூட்டணி 3வது முறையாக இணைந்துள்ள படம் தற்காலிகமாக ஏகே 61 என அழைக்கப்பட்டுவருகிறது. 

ஹைதரபாரத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் துவங்கிய இந்தப் படத்தின் படப்பிடிப்பு, இரண்டாம் கட்டமாக தற்போது லண்டனில் நடைபெற்றுவருவதாக கூறப்படுகிறது. லண்டனில் நடிகர் அஜித் இருக்கும் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. 

ADVERTISEMENT

இந்த நிலையில் இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டரை வருகிற ஆகஸ்ட் 13 ஆம் தேதி வெளியிட தயாரிப்பாளர் போனி கபூர் திட்டமிட்டுள்ளாராம். அன்றைய தினம் நடிகை ஸ்ரீதேவியின் பிறந்தநாள் என்பதால் போனி கபூர் இந்த முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதையும் படிக்க | அழகிய ராட்சசி! நந்தினியாக ஐஸ்வர்யா ராய் - வைரலாகும் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வனின் புதிய போஸ்டர்

ஏகே 61 திரைப்படம் வருகிற தீபாவளியை முன்னிட்டு திரைக்குவரவிருக்கிறது. இந்தப் படத்தின் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த தகவல்கள் இன்னும் முறையாக அறிவிக்கப்படவில்லை. குறிப்பாக இந்தப் படத்தின் இசையமைப்பாளர் யார் என்ற கேள்வி ரசிகர்கிளிடையே எழுந்துள்ளது. 

காரணம் வலிமை படத்தின் போது யுவன் ஷங்கர் ராஜாவுடன் இயக்குநர் வினோத்துக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்தப் படத்துக்கு ஜிப்ரான் பின்னணி இசையமைத்திருந்தார். இந்த நிலையில் ஏகே 61 படத்துக்கு ஜிப்ரானே இசையமைக்கலாம் என்று கூறப்படுகிறது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT